டெல்லி – மும்பை அணிகள் இன்று மோதல் !

peoplenews lka

டெல்லி – மும்பை அணிகள் இன்று மோதல் !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.

அதற்கமைய, இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதலாவது போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

குறித்த போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மதியம் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 08 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெறும் பட்சத்தில் ப்ளேஒப் (Playoff) சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.

தொடர்ந்து இன்றைய தினம் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.

குறித்த போட்டியானது லக்னோவில் அமைத்துள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் (Ekana Cricket Stadium) இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும் 2024ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் புள்ளிபட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் முதலாவது இடத்திலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on

விளையாட்டு

peoplenews lka

T20 உலகக் கிண்ணத் தொடருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ?...

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது... Read More

peoplenews lka

மும்பை - சன்ரைசர்ஸ் இன்று மோதல்...

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 55 ஆவது போட்டி இன்று (06) இடம்பெறவுள்ளது... Read More

peoplenews lka

ஐ.பி.எல் தொடரிலிருந்து மதீஷா பத்திரன விலகல் !...

இந்த தொடரில் சென்னை அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள மதீஷா பத்திரன 7.68 எகனமியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

ஐபிஎல் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று!...

லக்னோவில் இடம்பெறவுள்ள மற்றுமொரு போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன... Read More