பிரான்ஸ் அணி அரை இறுதிக்கு தெரிவானது.

peoplenews lka

பிரான்ஸ் அணி அரை இறுதிக்கு தெரிவானது.

கட்டாரில் நடைபெற்ற உலக கிண்ண தொடரின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை நடப்பு சம்பியன் பிரான்ஸ் அணி 2-1 என வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

விறு விறுப்பாக எதிர்பார்க்கப்பட்ட போட்டி, அதே போன்று இறுதி வரை சென்றது.

போட்டி ஆரம்பித்து 17 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி சார்பாக ஒரேலியன் சோமேனி முதல் கோலை அடித்த்தார். 54 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்தை பனால்டியினை கோலாக இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி கேன் மாற்றினார்.

78 ஆவது நிமிடத்தில் ஒலிவியர் ஜிரோட் பிரான்ஸ் அணி சார்பாக இரண்டாவது கோலை அடித்து முன்னிலை பெற்றுக்கொடுத்தார். 84 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பனால்டியினை இங்கிலாந்து அணியின் தலைவர் உயரமாக அடித்து தவறவிட்டார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி வாய்ப்பை தவறவிட்டது.

இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி ஏழாவது தடவையாக அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

பிரான்ஸ் அணி மொரோக்கோ அணியுடன் அரை இறுதிப் போட்டியில் 14 ஆம் திகதி நள்ளிரவு தாண்டி 12.30 இற்கு மோதவுள்ளது.

இங்கிலாந்து அணி கடந்த முறை உலக கிண்ண தொடரில் அரை இறுதிப் போட்டிகுத் தெரிவாகியுள்ள நிலையில் இம்முறை காலிறுதிப் போட்டியோடு வெளியேறியுள்ளது.

Share on

உள்நாடு

peoplenews lka

“மதுபான உரிமங்கள் எமது ஆட்சியில் தடை செய்யப்படும்”...

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.. Read More

peoplenews lka

“ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் நடைபெறாது”...

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது.. Read More

peoplenews lka

தாதியர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்...

தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும்.. Read More

peoplenews lka

மீள் மின் இணைப்பை 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளாவிடின் மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும்...

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின்  மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு.. Read More