சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் கிடைக்கும் என எதிர்பார்ப்பு !

peoplenews lka

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் கிடைக்கும் என எதிர்பார்ப்பு !

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

குறித்த மீளாய்வின் அடிப்படையில், ஊழியர் மட்ட இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்றுக் குழுவின் இணக்கப்பாடு வழங்கப்படாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் சில காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டை ஒப்பந்தமாக மாற்றுவது இதில் முக்கியமான நிபந்தனையாகுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது மற்றைய நிபந்தனையாகக் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பேச்சுவார்த்தையில் அடையாளங்காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில், இரண்டாவது பேச்சுவார்த்தையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உயர்ந்தபட்ச வௌிப்படைத் தன்மையுடன் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share on

உள்நாடு

peoplenews lka

“மதுபான உரிமங்கள் எமது ஆட்சியில் தடை செய்யப்படும்”...

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.. Read More

peoplenews lka

“ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் நடைபெறாது”...

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது.. Read More

peoplenews lka

தாதியர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்...

தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும்.. Read More

peoplenews lka

மீள் மின் இணைப்பை 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளாவிடின் மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும்...

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின்  மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு.. Read More