35 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல் !

peoplenews lka

35 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல் !

பியகம மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் சுமார் 35 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றிரவு (26) பண்டாரவத்த பகுதியில் கார் ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த காரில் இருந்து 15 கிலோகிராம் 81 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 14 கிலோகிராம் 527 மில்லிகிராம் ஹேஷ் ரக போதைப்பொருள் மற்றும் 941 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த காரில் இருந்த கடுவலை - பொமிரிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனை நடவடிக்கையின் போது 7 கிராம் 620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 2 சந்தேக நபர்களும், 220 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப் பொருளுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 31 மற்றும் 40 வயதுகளுக்கு இடைப்பட்ட கடுவலை, அரலகங்வில மற்றும் சியம்பலாபே ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share on

உள்நாடு

peoplenews lka

“மதுபான உரிமங்கள் எமது ஆட்சியில் தடை செய்யப்படும்”...

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.. Read More

peoplenews lka

“ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் நடைபெறாது”...

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது.. Read More

peoplenews lka

தாதியர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்...

தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும்.. Read More

peoplenews lka

மீள் மின் இணைப்பை 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளாவிடின் மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும்...

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின்  மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு.. Read More